Monday, 23 September 2013

சூர்யாவின் அடுத்த படத்தின் தலைப்பு 'ரவுடி' யா? லிங்குசாமி பதில்!

By Cinema Paiyyan   Posted at  9:49 pm   Surya No comments

யார் கிளப்பிவிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. எந்தவொரு எதிர்பார்ப்புக்குரிய படங்களை பற்றி செய்திகள் வெளியானாலும் பின்னாலேயே அதை மறுக்கக் கூடிய இக்கட்டுக்கு ஆளாகிவிடுகிறார்கள் அப்படம் சம்பந்தப்பட்ட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும். அண்மையில் அப்படி ஒரு கஷ்டத்திற்கு ஆளானவர் டைரக்டர் லிங்குசாமி.
இவர் தயாரித்து இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார் அல்லவா? இந்த படத்திற்கு ரவுடி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இன்று தனது ஃபேஸ்புக் தகவல் மூலம் அதை மறுத்திருக்கிறார் லிங்குசாமி. இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. அதற்குள் ரவுடி என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகிவிட்டது. இதை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார் அவர். விரைவில் புதிய தலைப்பை அறிவிக்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார். வேடிக்கை என்னவென்றால் இவர் எந்த தலைப்பு வைக்கப்படவில்லை என்று மறுத்திருக்கிறாரோ, அதே தலைப்பை வைக்கலாமே என்றும், நீங்கள் எடுத்தது சரியான முடிவுதான். வைக்காதீங்க என்றும் ரசிகர்கள் கருத்து கூற ஆரம்பித்துவிட்டார்கள். இதில் அதிகப்படியான கருத்துக்கள் எதுவோ, அதற்கே முன்னுரிமை தரலாமே சார்..

0 comments:

Back to top ↑
Connect with Us


© 2013 Cinema Paiyyan . WP Mythemeshop Converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.