Monday, 16 September 2013

நடிகரை மணக்கும் சின்மயி!

By Cinema Paiyyan   Posted at  5:53 pm   cinema No comments

 பாடகியாகவும், டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பிரபலமானவர் சின்மயி. மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் 'ஒரு தெய்வம் தந்த பூவே' பாடல் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானால் அறிமுகமானார்.

பாடிய முதல் பாடலுக்காக பல விருதுகளைப் பெற்ற சின்மயி தொடர்ந்து பல படங்களில் பாடினார். 'வாகை சூட வா' படத்தில் 'சர சர சாரக்காத்து' பாடல் பாடியதற்காக நிறைய விருதுகளைப் பெற்றார்.

பூமிகா, பத்மப்ரியா, சமீரா, கங்கனா ரணாவத், சமந்தா, காஜல் அகர்வால் என்று பல ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியிருக்கும் சின்மயி தற்போது திருமணத்துக்குத் தயாராகிவிட்டார்.

'மாஸ்கோவின் காவிரி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராகுல் ரவீந்திரனைக் காதல் திருமணம் செய்துகொள்ளப் போகிறார். சின்மயி - ராகுல் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதித்துவிட்டனர்.

ராகுல் 'வணக்கம் சென்னை' படத்தில் நடித்த முடித்த வேகத்தோடு, தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.

சினிமயி அம்மா பத்மாசினி இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார். ''என் மகள் சின்மயிக்கும், நடிகர் ராகுலுக்கும் திருமணம் நடக்கப்போவது உண்மைதான். அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

வரும் பிப்ரவரி மாதத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளோம்.வெகுவிரைவில் மற்ற விவரங்களைச் சொல்கிறேன்" என்றார்.

0 comments:

Back to top ↑
Connect with Us


© 2013 Cinema Paiyyan . WP Mythemeshop Converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.