மிகுந்த எதிர்பார்பிற்க்கு இடையில் அஜித் நடித்து இரண்டு வருடங்களுக்கு பிறகு வந்திருக்கும் படம் விவேகம். ஆனால் படம் அஜித் ரசிகர்களையும், மக்களையும் கவர்ந்ததா இல்லையா என பார்க்கலாம். படத்தின் இயக்குனர் சிறுத்தையும் இன்னும் என்ன செய்யலாம் எப்டிலாம் செய்யலாம்னு அவரோட முழு சிந்தனையையும் செதுக்கி இருக்காரு. என்னதான் பண்ணாலும் சட்டில இருக்குறது தான் அகப்பைல வரும்னு சொல்ற மாதிரி, ஏற்கனவே வந்த பல படங்களோட அரத பழசான காட்சிகள், கேட்டு கேட்டு சலிச்சு போன மொக்கையான வசனங்கள் என படம் மிக சுமாராக இருப்பது தான் பெரிய மைனஸ்.
அஜித்துக்கு சிறுத்தை சிவா கிட்ட அப்படி என்ன தான் புடிச்சி போச்சி தெரியல, தொடர்ந்து மூணு படம் அவர் Direction ல நடிக்குற அளவுக்கு அவருடைய முந்தைய இரண்டு படமும் பெருசா ஒன்னும் போகல. ஆனா சிறுத்தை இதுக்கு மேல ஒரு மனுசன செய்ய முடியுமானு தெரில அடுத்த படம் பாத்தா தெரியும் .படத்தோட கதைய பத்தி சொல்லனும்னா, சாரி அப்டி ஏதும் இல்ல இருந்தா சொல்லாம். Screenplay வழக்கம் போல செஞ்சிட்டாரு. தளபதி யோட சுறா குருவி படங்கள Beat பண்ணிட்டாரு தல . அநியாயத்துக்கு பறக்குறாரு, Air லையே ஷூட் பண்றாரு, இன்னும் நிறைய இருக்கு. பாவம் இனி தல ரசிகர்கள் தளபதி பேன்ஸ் கிட்ட குருவி, சுறாவ சொல்லி கிண்டல் பண்ண முடியாது.
தல ரசிகர்களே, அடுத்த படத்துல Director ஹ மாத்துங்கன்னு பேச வச்சுருக்காரு சிறுத்தை, பாவம் அவங்களும் எவ்ளோ நாளைக்கு தான் வலிக்காத மாதிரியே நடிப்பாங்க. படம் முழுக்க அஜித்தை யாராவது புகழ்ந்துகிட்டே இருக்காங்க, முதுகுல குத்திட்டாங்க, தன்னை தானே செதுக்கியவன் மாதிரியான Template ல இருந்து அஜித் வெளிய வரணும், இல்லனா ஷங்கர், முருகதாஸ் வந்து டைரக்ட் பண்ணா கூட படம் ஓடாது.
சிறுத்தைக்கு நாங்கள் கூற விரும்புவது , வெளிநாட்ல போய் எடுக்குற படமெல்லாம் Hollywood படம் இல்ல. சட்டைய கழட்டிட்டு சண்ட போட்டா Best Action Movie கிடையாது. அஞ்சான் ல லிங்கு அண்ணன் பக்கதுல இருந்த மாதுரி உங்க பக்கதுல ஒரு குழு இருக்கும்னு நினைக்குறேன். நீங்க என்ன சொன்னாலும் சூப்பர்னு சொல்ற அந்த குழுவ மாத்துங்க. படத்துல பாராட்ட கூடிய ஒரே நபர் படத்தோட ஹீரோ தல மட்டும் தான், மனுஷன் எவ்ளோ முடிமோ அவ்வளவு உழைச்சிருக்காரு. ஆனா அந்த உழைப்பெல்லாம் இப்படி ஒரு ரொம்ப சாதரணமான கதைல, சரியான டைரக்டர் இல்லாததால எல்லாம் வீனா போயிருச்சின்னு நினைக்கும் போது கஷ்டமா இருக்கு.
படத்த அவர் ரசிகர்களுக்கு மட்டும் எடுத்துருக்காங்க ஆனா பாவம் அவங்களையே முகம் சுளிக்க வைக்குது. மொட்ட சிவா கெட்ட சிவா படத்த வெளிநாட்ல பண்ணுன மாதுரி இருக்கு, இனியும் அஜித் ரசிகர்கள் இதை போன்ற படத்தை வெறும் வீம்புக்காக சப்போர்ட் பண்ணிட்டு இருக்காம, அவர நல்ல படங்கள்ல, நல்ல டைரக்டர் செலக்ட் பண்ணி நடிக்க வையுங்க. இந்த படத்தை எப்படியும் Block Buster, சூப்பர் ஹிட்னு ட்விட்டர்ல tag போட்டு பொய்யா சந்தோஷப்பட தான் போறாங்க. அதையும் நாம பாக்க தான் போறோம். சரி அத கூட தாங்கிக்கலாம், செவ்வாய் கிரகத்துல இவ்ளோ வசூல், அவ்ளோ வசூல்னு ஏதாவது மஞ்ச பத்திரிகையை தூக்கிட்டு வருவாங்களே அத நெனச்சா தான்..
மொத்ததுல இந்த படத்த ஒரு முறை அஜித்தோட உழைப்புக்காக பார்க்கலாம்.
Rating - 2.25/5
ட்விட்டர் பக்கம்: